சி.பி.எஸ்.சி 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைப்பு..!

சி.பி.எஸ்.சி 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைப்பு..!
நடப்பாண்டு 9ம் வகுப்பு சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் குறைத்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள் முழுமையாக நடத்தப்படாததாலும், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை மாணவர்கள் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் எனத் கூறப்பட்டுள்ளது. அண்மையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் 30 விழுக்காடு குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் பாடத்திட்டமும் குறைக்கப்பட்டுள்ளது.
Comments