டிடிவி மன்னிப்புக் கேட்டால் அதிமுகவில் இணைக்க பரிசீலனை - கே.பி.முனுசாமி

0 10568
டிடிவி மன்னிப்புக் கேட்டால் அதிமுகவில் இணைக்க பரிசீலனை - கே.பி.முனுசாமி

திமுக - அமமுக இணைய வாய்ப்பே இல்லை என்றும், தனது தவறுகளை ஒப்புக்கொண்டு டிடிவி தினகரன் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், அவரை தொண்டராக ஏற்பது குறித்து தலைமை பரிசீலிக்கும் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என்றும், கட்சியில் இல்லாத ஒருவர் தனது காரில் கட்சிக் கொடியை பயன்படுத்தியது கண்டனத்துக்கு உரியது என்றும் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments