அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தொழிலதிபர் அனூப் குப்தாவை கைது செய்தது அமலாக்கத்துறை

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தொழிலதிபர் அனூப் குப்தாவை கைது செய்தது அமலாக்கத்துறை
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்குத் தொடர்பாக தொழிலதிபர் அனூப் குப்தாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டிடம் 12 வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
இந்த விவகாரத்தில் இந்தியா கேட் பாஸ்மதி அரிசியை தயாரிக்கும் கே.ஆர்.பி.எல் நிறுவன இயக்குனரும், தொழில் அதிபருமான அனூப் குமார் குப்தா 3,600 கோடிக்கு ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனூப் குப்தாவை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments