கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்

0 2001
கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்

கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக 3 நாட்களுக்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் காணப்படும்.

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், நாளை முதல் 3-ம் தேதி வரை அங்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments