"உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்" ; முதலமைச்சருக்கு கேள்வி...

0 5302
"உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்" ; முதலமைச்சருக்கு கேள்வி...

ம்.ஜி.ஆரின் புகழைப் பாடிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் முகத்தை அருகே நின்று பார்த்ததுண்டா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில், திருவள்ளுர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் நாசர், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், பொதுமக்களோடு கலந்துரையாடி, மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, திருத்தணியில் தனக்கு வேல் பரிசளிக்கப்பட்டதை கண்டு முதலமைச்சர் ஏன் அஞ்சுகிறார் என கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், வேலை வைத்து சூரசம்ஹாரம் செய்துவிடுவோம் என்ற பயமா என்றும் வினவினார்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு மட்டுமல்ல, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அரசியல் வாழ்க்கைக்கும் சேர்த்தே முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.

கூட்டத்திற்கு கூட்டம் எம்.ஜி.ஆரின் புகழைப் பாடும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, என்றாவது எம்.ஜி.ஆரை அருகில் நின்று பார்த்ததுண்டா எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், எம்,ஜி.ஆர் உடனான நினைவலைகளையும் பகிர்ந்து கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments