தமிழகத்தில் பிப். 8ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கும்- தமிழக அரசு

0 107640
தமிழகத்தில் பிப். 8ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கும்- தமிழக அரசு

மிழகத்தில் மேலும் பல்வேறு தளர்வுகளுடன் பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 8-ம் தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு, மேலும் பல புதிய தளர்வுகளுடன் பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, வருகிற 8-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மாணவர்களுக்கான விடுதிகளை திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளைநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

மல்டிபிளக்ஸ் உள்பட அனைத்து திரையரங்குகளும் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி பிப்ரவரி 1-ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கண்காட்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், இராமேஸ்வரம் தீர்த்தமாடுதல் ஆகியவைகள் அனுமதிக்கப்படுகின்றன. கிரிக்கெட் உட்பட விளையாட்டு நிகழ்ச்சிகளை 50% பார்வையாளர்களுடன் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உள்ளரங்கங்களில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளை அதிகபட்சமாக 600 பேருடன் நடத்திக் கொள்ளலாம். அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி போன்ற பொதுமக்கள் சார்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

அதேசமயம், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments