ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு

0 904
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு

ப்கானிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

நங்கர்ஹார் என்ற பகுதியில் வாகனம் ஒன்றில் வெடிமருந்தை ஏற்றி வந்த தீவிரவாதி ஒருவன் பாதுகாப்புப் படையினர் அருகே வந்ததும் அதனை வெடிக்க வைத்துள்ளான்.

இதில் அவனுடன் 8 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

நேற்று முன்தினம் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 58 தாலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பழிவாங்கவே தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments