பிரதமர் மோடி வரும் 14ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்

0 2316
பிரதமர் மோடி வரும் 14ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்

ண்ணாரப்பேட்டை - விம்கோநகர் மெட்ரோ ரயில் திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.

புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்க வருமாறு பிரதமர் மோடிக்கு டெல்லி சென்ற முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று, வருகிற 14-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதிமுக - பா.ஜ.க கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் வருகையின் போது, பொதுக்கூட்டம் நடத்துவதற்கான வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments