பப்ஜியால் பறிபோகும் உயிர்கள்.. தாய் கண்டித்ததால் 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..!

0 4170

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.

ஒசூர் மாநகராட்சி பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வருபவர், வாய்பேச முடியாத ஜெயலட்சுமி. கணவர் கடந்தாண்டு உயிரிழந்த நிலையில் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

அவரது இரண்டாவது மகன் ரவி அரசு தொழிற்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில், அடிக்கடி பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளான். இதனை அவரது தாயும், சித்தப்பாவும் கண்டித்ததால் மன உலைச்சலில் இருந்த ரவி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments