எந்திரன் கதை திருட்டு இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்டு..! 10 வருடங்களாக இழுத்தடிக்கும் கொடுமை

0 20431

எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடனின் ஜூகிபா என்ற கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்தது தொடர்பான வழக்கில் ஆஜராகாமல் 10 வருடம் இழுத்தடித்து வரும் இயக்குனர் ஷங்கருக்கு எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது...

கோடிக்கணக்கில் தயாரிப்பாளரை முதலீடு செய்யவைத்து..! வருடக்கணக்கில் படப்பிடிப்பு நடத்தி...! கோடிகளை சம்பளமாக பெறுவதால் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் ஷங்கர்..!

இவரது இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 1996 ஆம் ஆண்டு இனிய உதயம் என்ற பத்திரிக்கையில் தான் எழுதிய ஜூகிபா என்ற கதையை திருடி ஷங்கர் எந்திரன் படத்தை உருவாக்கியுள்ளதாகவும், தன்னுடைய கதையை திருடிய ஷங்கரிடம் இருந்து இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

10 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி இழுத்தடித்த கதை திருட்டு புகாருக்குள்ளான ஷங்கர், இந்த வழக்கை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்றார். ஆனால் ஆரூர் தமிழ் நாடனின் கதைக்கும் ஷங்கரின் எந்திரன் படத்துக்கும் 16 ஒற்றுமைகள் அப்படியே உள்ளதால் காப்புரிமை சட்டத்தின் கீழ் இடக்குனர் ஷங்கருக்கு எதிராக இந்த வழக்கை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த வழக்கு எழும்பூர் 13 வது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி வந்த இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் சனிக்கிழமை அதிரடி உத்தரவிட்டது.

ஏற்கனவே இந்தியன் படத்தின் 2 வது பாகத்தின் படப்பிடிப்பு நடக்குமா நடக்காதா என்று ஷங்கர் கலங்கி நிற்கும் நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு நீதி மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் இயக்குனர் ஷங்கர் ஷாக் அடைந்துள்ளார்.

ஷங்கர் மட்டுமல்லாமல் ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி மற்றும் லோகேஸ் கனகராஜ் உள்ளிட்டோரின் திரைப்படங்கள் கதை திருட்டு புகாருக்குள்ளானது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments