தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா

தமிழ்நாட்டில் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மதுரை பாண்டிக்கோயில் அருகே நடைபெற்ற கட்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், வேட்டி-சட்டையில் பங்கேற்றுப் பேசிய நட்டா, திருவிளையாடல் நடந்த மதுரை பெண்கள் முன்னேற்றத்திற்கான வரலாற்று நகரம் என்றும், ராணி மங்கம்மாளே அதற்கு சாட்சி என்றும் தெரிவித்தார்.
யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற, கனியன் பூங்குன்றனாரின் வரிகளை, பிரதமர் நரேந்திர மோடி, அனைவரிடத்திலும் எடுத்துச் செல்வதாகவும், ஜே.பி.நட்டா குறிப்பிட்டார்.
மாநிலங்களுக்கான தேவைகளை தேசியத்தோடு இணைந்து பெற வேண்டும் என எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் செயல்பட்டதாகவும், நட்டா கூறினார்.
Comments