டெல்லி குண்டு வெடிப்பு... இது டிரைலர் தான்...!

0 8299
டெல்லி குண்டு வெடிப்பு... இது டிரைலர் தான்...!

டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு ஜெய்சுல் இண்ட் பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. குண்டு வெடிப்பை அடுத்து நாடு முழுக்க பல ஊர்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

டெல்லியில் அப்துல்கலாம் சாலையில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே நேற்றிரவு சக்தி குறைந்த குண்டு ஒன்று வெடித்தது. இதில் சாலைக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு கார்களின் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்து சிதறின. பலத்த பாதுகாப்பு மிகுந்த இடத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இன்று காலையிலும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். இதனிடையே அங்குள்ள கண்காணிப்பு கேமிராவை ஆராய்ந்த போலீசார், ஒரு வாடகை காரில் வந்திறங்கிய இருவரே குண்டை வெடிக்க வைத்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்துள்ளனர். அவர்களின் படத்தை வரைந்துள்ளதோடு, கார் ஓட்டுநரை அடையாளம் காணும் பணியும் தொடங்கி உள்ளது. மேலும் குண்டு வெடித்த இடத்தில் கிடந்த காகிதத்தில், இது வெறும் டிரைலர் தான் என்றும், ஈரானின் தளபதி குவாசின் சுலைமானி, அணு விஞ்ஞானி Mohsen Fakhrizadeh ஆகியோர் தியாகிகள் என்றும், பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கையால் எழுதப்பட்டிருந்தது.

ஒன்றரை பக்கம் கொண்ட அந்த காகித குறிப்பை கொண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே தேசிய புலனாய்வு அமைப்பினர்,ஜெய்சுல் இண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு டெல்லி குண்டு வெடிப்பிற்கு பொறுப்பு ஏற்றுள்ளதை கண்டறிந்துள்ளனர். சமூக வலை தளமான டெலிகிராப்பில் அந்த அமைப்பினர் மேற்கொண்ட செய்தி பரிமாற்றத்தின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே டெல்லி குண்டு வெடிப்பை அடுத்து ஹரித்துவார் உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments