தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 26029

தமிழகத்தில் அடுத்து 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக வருகிற 2 ஆம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த இரு நாட்களுக்கு வடக்கு மாவட்டங்களில் காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும் என்றும், 3 ஆம் தேதி தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், வறண்ட வானிலையே காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் பனி மூட்டம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments