கர்நாடக சட்டமேலவையில் காங்கிரஸ் எம்எல்சி பிரகாஷ் ரத்தோட் ஆபாசப் படம் பார்த்ததாக சர்ச்சை

0 1237
கர்நாடக சட்டமேலவையில் காங்கிரஸ் எம்எல்சி பிரகாஷ் ரத்தோட் ஆபாசப் படம் பார்த்ததாக சர்ச்சை

ர்நாடக சட்டமேலவை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, காங்கிரஸ் எம்எல்சி பிரகாஷ் ரத்தோட் ஆபாசப் படம் பார்த்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

2012ஆம் ஆண்டில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் லட்சுமண் சவடி, சி.சி.பாட்டீல், கிருஷ்ணா பலேமர் ஆகிய மூன்று பேரும் சட்டமன்ற நடவடிக்கைகளின்போது, செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்தது, தனியார் தொலைக்காட்சி கேமிராவில் பதிவாகி வைரலாக பரவியது.

இதையடுத்து சட்டமன்றத்திற்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

தற்போது இதேபோன்ற சர்ச்சையில், கர்நாடக சட்டமேலவை உறுப்பினரான பிரகாஷ் ரத்தோட் சிக்கியுள்ளார்.

அவை நடவடிக்கைகளின்போது செல்ஃபோனில் வீடியோக்களை பிரகாஷ் ரத்தோட் ஸ்கிரால் செய்வதும், அப்போது சில ஆபாச வீடியோக்களை கடந்து செல்வதும் தனியார் தொலைக்காட்சி கேமிராவில் பதிவாகியுள்ளது.

  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments