இஸ்ரேலிடம் கொள்முதல் செய்யப்பட்ட லைட்வெயிட் மெஷின் கன் : முதற்கட்டமாக இந்தியா வந்தடைந்த 6,000 எந்திரத் துப்பாக்கிகள்

0 2992
இஸ்ரேலிடம் கொள்முதல் செய்யப்பட்ட லைட்வெயிட் மெஷின் கன் : முதற்கட்டமாக இந்தியா வந்தடைந்த 6,000 எந்திரத் துப்பாக்கிகள்

ஸ்ரேலிடம் கொள்முதல் செய்யப்பட்ட லைட்வெயிட் மெஷின் கன்களில், முதல் கட்டமாக 6 ஆயிரம்  எந்திரத் துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.

இலகு ரக எந்திரத் துப்பாக்கிகள், முன்கள ராணுவ வீரர்கள் எளிதாகவும் திறனுள்ள வகையிலும் பயன்படுத்த ஏற்றவை.

அதன்படி, நெகவ் எல்எம்ஜி எனப்படும், 16 ஆயிரத்து 479 இலகு ரக எந்திரத் துப்பாக்கிகளை இஸ்ரேல் ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்க, கடந்த ஆண்டு மார்ச்சில் 880 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

இதில் முதல் கட்டமாக 6 ஆயிரம் எந்திர துப்பாக்கிகள் மும்பைக்கு அனுப்பப்பட்டு, ஜபல்பூரில் பரிசோதிக்கப்பட்டன. மீதமுள்ள துப்பாக்கிகள் வரும் மார்ச்சில் வர உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments