''சூரரைப் போற்று'' திரைப்படத்தில் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார் - அஜின்கியா ரஹானே

0 5072

சூரரைப் போற்று திரைப்படத்தில், சூர்யா சிறப்பாக நடித்துள்ளதாக இந்திய வீரர் அஜின்கியா ரகானே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள ரகானே, சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி உள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் அவர் ஏதேனும் தமிழ் படங்கள் பார்த்துள்ளாரா என கேட்ட போது, சூரரைப் போற்று திரைப்படத்தை Subtitle உதவியுடன் தான் மிகவும் ரசித்ததாகத் தெரிவித்தார்.

மேலும் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை பார்க்கும் படி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பரிந்துரைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments