ரூ.130 கோடி வணிக வளாகத்தை சசிகலா வாங்கிய விவகாரம்... பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை சரியே - வருமான வரித்துறை

மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளை பயன்படுத்தி 130 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்பெக்டரம் மால் என்ற வணிக வளாகத்தை சசிகலா வாங்கியதாக கூறப்படும் விவகாரத்தில் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது சரியே என வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததை எதிர்த்து, சென்னை - பெரம்பூர் ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே ஸ்பெக்ட்ரம் மாலை விற்பனை செய்துள்ளதால் தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தை பயன்படுத்த முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
வருமான வரித்துறை வழக்கறிஞரின் வாதம் முடிவடையாததால், வழக்கு விசாரணையை பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.
Comments