பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் திறப்பு

0 4551

பாகிஸ்தானில் உள்ள  ஐதராபாத் நகரத்தில்  126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் புனரமைப்பப்பட்டு  திறக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இந்து மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள ஐதராபாத் நகரத்தில் அமைந்துள்ள, 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.  பின்னர்,  பக்தர்களின் வழிபாட்டுக்காக கடந்த வெள்ளிக்கிழமை இந்த கோயில் திறக்கப்பட்டது. கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக, கோவிலை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  

மேலும், பாகிஸ்தான் முழுவதும் பல இந்து கோவில்கள் சமீபத்தில் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில், சியால்கோட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஷாவல தேஜா கோவிலும் அடங்கும் என்று கூறினார். மேலும், புனரமைக்கப்பட்ட இந்த கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளூர் இந்து அமைப்பிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.   பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 90% சதவிகிதம் பேர் இஸ்லாமியர்களாக இருந்தாலும் பாகிஸ்தானில் மிகப்பெரிய சிறுபான்மையினராக இந்துக்களே கருதப்படுகின்றனர். இந்த நாட்டில் சுமார் 75 லட்சம் இந்துக்கள் வாழ்ந்து வருவதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments