குடிபோதையில் தாறுமாறாக ஓடிய வாகனம்... தூக்கி வீசப்பட்ட பெண்கள்...பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், மதுபோதையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் 3 பேர் பணியை முடித்து விட்டு ஏற்காடு தபால் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தாறுமாறாக ஓடிய இருசக்கர வாகனம் மோதியதில் பெண்கள் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தில் காயமடைந்த அனைவரும் ஏற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தலையில் படுகாயமடைந்த பெண்கள் இருவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது பின்னர் தெரியவந்து.
Comments