பழனி முருகன் கோயிலில் கிரிக்கெட் வீரர் நடராஜன் மொட்டையடித்து சுவாமி தரிசனம்..!

0 20499
பழனி முருகன் கோயிலில் கிரிக்கெட் வீரர் நடராஜன் மொட்டையடித்து சுவாமி தரிசனம்..!

பழனி முருகன் கோவில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். நடராஜனை பார்த்து செல்பி எடுத்துக் கொள்ள ரசிகர்கள் முண்டியடித்தனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்று மூன்று வகையிலான பார்மட்களிலும் பங்கேற்று இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் அசத்தினார். தொடர்ந்து, தாயகம் திரும்பிய அவருக்கு சேலத்தில் உற்சாக வரவேற்க அளிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள தமிழகத்தைச் சார்ந்த வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகைதந்தார்.

மலை அடிவாரத்தில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் , ரோப் கார் மூலமாக மலைமீது சென்று சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. பழனி முருகனை தரிசனம் செய்ய வந்த இடத்தில் கிரிக்கெட் வீரர் நடராஜனை பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். 

கோயில் நிர்வாகம் சார்பில், பழனி முருகன் புகைப்படம் நடராஜனுக்கு பரிசாக வழங்கப்பட்டது. பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சூழ்ந்திருந்தனர்.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் நடராஜனை கண்ட ரசிகர்களும் கடும் உற்சாகமடைந்தனர். ஏராளமான பக்தர்கள் நடராஜனை சூழ்ந்துகொண்டு புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தனர். ரசிகர்களிடத்தில் சிக்கி திக்குமுக்காடிய நடராஜனை போலீசாரும் நண்பர்களும் பத்திரமாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments