சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டுப் பிரச்சினை காரணமாக இரு முதுநிலைப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நிறுத்தம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டுப் பிரச்சினை காரணமாக இரு முதுநிலைப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நிறுத்தம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டுப் பிரச்சினை காரணமாக இரண்டு முதுநிலைத் தொழில்நுட்பப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்து பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய நுழைவுத் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள நிலையில், மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் 50 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதா அல்லது மாநில அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை பின்பற்றுவதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால் M.Tech.,பயோடெக்னாலஜி மற்றும் M.Tech., கம்புடேஷனல் பயாலஜி ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை.
Comments