கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் முடிவை ஏற்போம்; தே.மு.தி.க. தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் உறுதி

0 2623
கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் முடிவை ஏற்போம்; தே.மு.தி.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் உறுதி

தேமுதிகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், தேமுதிகவின் நிறுவன தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது, சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது, பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் என்ன முடிவு எடுத்தாலும் அதனை ஏற்க தயார் என நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments