ஜம்மு-காஷ்மீரில் என்கவுன்ட்டரில் ஒரு தீவிரவாதியை போலீசார் சுட்டு வீழ்த்தியதை அடுத்து, உடனிருந்த 2 தீவிரவாதிகள் சரண்..!

0 1066
ஜம்மு-காஷ்மீரில் என்கவுன்ட்டரில் ஒரு தீவிரவாதியை போலீசார் சுட்டு வீழ்த்தியதை அடுத்து, உடனிருந்த 2 தீவிரவாதிகள் சரண்..!

ம்மு-காஷ்மீரில் என்கவுன்ட்டரில் ஒரு தீவிரவாதியை போலீசார் சுட்டு வீழ்த்தியதை அடுத்து, உடனிருந்த 2 தீவிரவாதிகள் ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் சரணடைந்தனர்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெல்ஹர் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில், போலீசார் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றிவளைத்துள்ளனர். அப்போது மூண்ட மோதலில், தீவிரவாதி ஒருவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்நிலையில், அந்த தீவிரவாதியுடன் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் போலீசாரிடம் சரணடைந்தனர். முன்னதாக, புல்வாமாவின் அவந்திபோரா பகுதியில் நேற்று நடைபெற்ற மற்றொரு என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments