டெல்லி சிங்கூ எல்லையில் உள்ளூர் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல்; 44 பேர் கைது

0 861
டெல்லி சிங்கூ எல்லையில் உள்ளூர் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல்; 44 பேர் கைது

டெல்லியின் அருகே சிங்கூ எல்லையில் வன்முறையில் ஈடுபட்டதாக 44 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் இப்பகுதியில் நேற்று உள்ளூர் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதலும் வன்முறையும் மூண்டது. இதனால் அப்பகுதி மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போலீசார் கலவரத்தில் ஈடுபட்ட 44 பேரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

இதில் வாளை உருவி மிரட்டிய நபர் ஒருவரும் சிக்கியுள்ளார். அவர் பெயர் ரஞ்சித் சிங் என்று போலீசார் தெரிவித்தனர்.அவரிடமிருந்த வாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments