ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ்ஸிக்கு கொரோனா தடுப்பூசி..!

ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ்ஸிக்கு கொரோனா தடுப்பூசி..!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
71 வயதான அவர், தடுப்பூசி போடுவதற்கு தனது பெயரைப் பதிவு செய்திருந்தாகவும், நியூயார்க் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அன்டோனியா குட்டரெசின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குட்டரெஸ், கொரோனா தடுப்பூசி பெற்று கொண்டதை நினைத்து தான் அதிர்ஷ்டமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாய்ப்புகளை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிக்கொள்வதாகவும் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
Comments