டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்துல்கலாம் சாலையில் உள்ள அந்த தூதரகத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. வெடித்தது குறைந்த சக்தி கொண்ட குண்டு என்பதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இஸ்ரேல் தூதரகம் அருகே நிறுத்தப்பட்டு இருந்த 3 கார்களின் கண்ணாடிகள் இந்த குண்டுவெடிப்பில் சேதமடைந்தன.
குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதை தீயணைப்புதுறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர். தேசிய பாதுகாப்பு படையினர் விரைந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
Comments