கொடைக்கானலில் ப‌டுஜோராக நடக்கும் மேஜிக் மஸ்ரூம் விற்பனை... மீண்டும் தலைதூக்கும் போதைப் பழக்கம்!

0 38311

கொடைக்கானல் மலைப்பகுதியில் மீண்டும் ப‌டு ஜோராக நடந்து வரும் மேஜிக் மஷ்ரூம் எனப்படும் போதை காளான் விற்பனை மீது காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌த்தில் உள்ள இயற்கை சுற்றுலாத் தளமான கொடைக்கான‌லில் இதமான சீதோஷண சூழ்நிலை நிலவி வருகிறது. வருடந்தோறும் அதிக விடுமுறை தினங்கள் கொண்ட ஜனவரி மாதத்தில் தொட‌ர் விடுமுறை ம‌ற்றும் வார‌விடுமுறை நாட்களில் ஏராளமான‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் கொடைக்கானல் வ‌ருவ‌து வ‌ழ‌க்க‌ம். இந்த ஆண்டு கொரோனா கெடுபிடிகள் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் இதம் தரும் இயற்கையான சீதோஷ்ன நிலையை அனுபவிக்க த‌மிழ‌க‌ம் ம‌ட்டுமின்றி கேர‌ளா, ஆந்திரா, கர்நாட‌கா உள்ளிட்ட ப‌ல்வேறு மாநிலங்களிலிருந்து இருந்தும் ஏராளமான‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் குவிந்து வருகின்றனர்.

கொடைக்கானலில் மேஜிக் மஷ்ரூம் எனப்படும் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை கடந்த சில வருடங்களாக அதிகரித்து காணப்பட்டது. தீவிர காவல்துறை கண்காணிப்பு மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக போதை காளான் விற்பனை குறைந்தது. கொரோனா தளர்வுகள் அளிக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலாபயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்த நிலையில் மீண்டும் அங்கு மேஜிக் மஷ்ரூம் எனப்படும் போதை காளான் மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.

மேஜிக் மஷ்ரூமின் தாவிரவியல் பெயர் ’சைலோசைபி’. இதனை உட்கொண்ட 8 மணி நேரத்திற்கு போதை இருப்பதாகவும் கூறப்படப்படுகிறது. இந்த நிலையில் சில‌வார‌ங்க‌ளாக‌ கொடைக்கானல் கே.ஆர்.ஆர் கலையரங்கம் ,சின்ன பள்ளம், மன்னவனூர், கூக்கால் மற்றும் குண்டுபட்டி உள்ளிட்ட கிராமங்களில் வெளிப்படையாக போதை காளான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

போதை வஸ்து விற்பனையாளர்களின் ஆசை வார்த்தைகளில் வீழும் இளைஞர்களிடம் போதை காளானை படுஜோராக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் போதை பொருளின் விளைவு தெரியாம‌ல் இளைஞ‌ர்க‌ள் பலரும் அடிமையாகி வாழ்க்கையை இழ‌ந்து விடுகின்ற‌னர். இந்த‌ போதை பொருள்க‌ளினால் உட‌லில் ப‌ல்வேறு பாதிப்புக‌ளும் எற்ப‌ட்டு ப‌ல‌ரும் உயிரிழ‌ந்தாக‌வும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. காவ‌ல்துறை சார்பில் ப‌ல்வேறு நட‌வ‌டிக்கைக‌ள் எடுக்க‌ப்ப‌ட்டாலும் போதை பொருள் விற்ப‌னையை த‌டுக்க‌ முடிய‌வில்லை. என‌வே போதை காளான் மற்றும் போதை வ‌ஸ்துக்க‌ளை விற்ப‌னை செய்வோரை க‌ண்ட‌றிய‌வும், பொது இட‌ங்க‌ளில் விற்ப‌னையில் ஈடுபடுவோர் மீது காவ‌ல்துறை க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வேண்டுமென‌ ச‌மூக‌ஆர்வ‌ல‌ர்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

மேலும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு குண்டுபட்டி கிராமத்தில் போதை பொருட்களுடன் கேளிக்கை விருந்தில் பங்கேற்ற 257 இளைஞ‌ர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments