போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான தருணம் இது - உயர்நீதிமன்றம்

0 2659

பதின்பருவ வயதில் காதல் வயப்படுபவர்கள் சிலர் போக்சோ சட்டத்தால்,  வாழ்க்கையை இழந்து விடுவதாக கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அந்த சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இந்திரன் என்பவர், மைனர் பெண்ணை கடத்தியதாக,  2018ல் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கால் தனது திருமணம் தடைபடுவதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்திரன் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

இதுபோல், காதல் உறவுக்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, பதின்பருவ இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையை இழந்து விடுவதாக நீதிபதி தெரிவித்தார்.  எனவே, போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர இதுவே தக்க தருணம் என்றும், நீதிபதி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments