ஜியோவை விட அதிக வாடிக்கையாளர்களை பெற்ற ஏர்டெல் நிறுவனம்

ஜியோவை விட அதிக வாடிக்கையாளர்களை பெற்ற ஏர்டெல் நிறுவனம்
கடந்த நவம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, தொடர்ச்சியாக 4 மாத காலமாக ரிலையன்ஸ் ஜியோவை பின்னுக்கு தள்ளி ஏர்டெல் நிறுவனம் அதிக புதிய வாடிக்கையாளர்களை பெற்று வருகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஜியோ நிறுவனம் 19 லட்சம் வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. இந்த காலக் கட்டத்தில் வோடாபோன் நிறுவனம் 29 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்திய டெலிகாம் சந்தையில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டு ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
Comments