ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தொற்றை மேலும் கட்டுக்குள் கொண்டு வர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்குவது, நீச்சல் குளங்களுக்கு அனுமதி மற்றும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தடுப்பூசிகள் போடுதல், உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் உள்ளிட்டவை குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடனும் முதலமைச்சர் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவுடனான ஆலோசனையத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments