தென் தமிழகத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் -வானிலை ஆய்வு மையம்

0 2564
கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்து வரும் 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், வருகிற 1, 2 ஆகிய தேதிகளில் அங்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments