தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 39.55 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி

0 1284

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில், 39.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 6ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.  தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர் இத்தேர்வை எழுதினர். நாடு முழுவதும் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் நீட் தேர்வை எழுதினர்.

தமிழில் தேர்வு எழுத பதிவு செய்திருந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்து 720. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. cbseneet.nic.in, cbseresults.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலம் நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 7 லட்சத்து 14 ஆயிரத்து 562 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 பேரில், 45 ஆயிரத்து 336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 சதவீத தேர்ச்சி விகிதமாகும். புதுச்சேரியில் இருந்து தேர்வு எழுதிய 4 ஆயிரத்து 462 பேரில் 1,768 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அகில இந்திய அளவில் பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தெலுங்கானாவை சேர்ந்த ரோஹன் புரோகித் 690 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், டெல்லியை சேர்ந்த ஹிமான்சு சர்மா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்களுடன் 12ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments