பஞ்சாப் மாநிலத்தில் 40 தானியக் கிடங்குகளில் சி.பி.ஐ சோதனை : தரமற்ற பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பெயரில் நடவடிக்கை

பஞ்சாப் மாநிலத்தில் 40 தானியக் கிடங்குகளில் சி.பி.ஐ சோதனை : தரமற்ற பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பெயரில் நடவடிக்கை
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் நாற்பது தானியக் கிடங்குகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் தானிய கொள்முதல் நிலையம், இந்திய உணவுக் கழகத்தின் சில குடோன்கள் உள்ளிட்ட நாற்பது இடங்களில் துணை ராணுவப்படையினரின் பாதுகாப்புடன் சி.பி.ஐ. சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனையின் போது 2019-20 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட்ட கோதுமை மற்றும் அரிசியின் மாதிரிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப்பில் கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தில் சந்தேகம் எழுந்த நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது.
அதே சமயம் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க சிபிஐ பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
Comments