அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் - பிரதமர் மோடி

0 2444
அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் - பிரதமர் மோடி

அடுத்து வரும் பத்தாண்டுகள் நாட்டிற்கு மிக முக்கியமானவை என்றும்,தங்கமான வாய்ப்புகள் காத்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பத்தாண்டுகளின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது என்றார், வரும் பத்தாண்டுகள் நாட்டின் வளர்ச்சிக்கு ஒளி மிகுந்த எதிர்காலத்தை கொண்டு வர உள்ளதாக அவர் கூறினார்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்ட கனவுகளை நனவாக்க தங்கமான வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறிய அவர், அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இதனை மனதில் நிறுத்தி நாடாளுமன்ற கடமைகளை அனைவரும் ஆற்ற வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் பின்தங்கி விடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments