ஆசை கண்ணை மறைத்தது... பேங்க் பேலன்ஸ் கரைந்தது!- கதறியபடி போலீசில் புகாரளித்த தொழிலதிபர்

0 23372

தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.34 லட்சத்தை மோசடி செய்த பெங்களூருவைச் சேர்ந்த 2 இளம் பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சென்னையை சேர்ந்தவர் வெங்கடேசன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு வேலை காரணமாக பெங்களூருவுக்கு சென்றுள்ளார். பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் சுகன்யா என்பவருடன் ஒரே அறையில் தங்கியுள்ளார். அப்போது, சுகன்யாவுடன் தொழிலதிபர் தனிமையில் இருந்துள்ளார். இதை தொழிலதிபருக்கு தெரியாமல் சுகன்யா செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் , அந்த வீடியோவை வெங்கடேசனிடத்தில் காட்டிய சுகன்யா, சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ. 20 லட்சம் கேட்டு மிரட்டி பறித்துள்ளார்.

கடந்த ஆண்டு( மார்ச் மாதம் நந்தினி என்பவர் தொழில் அதிபர் வெங்கடேசனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது , 'உங்கள் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் வீடியோ அனுப்பியுள்ளேன். அதை பார்க்கவும் ' எனக்கூறி இணைப்பை துண்டித்துள்ளார். ஹோட்டலில் தங்கியிருந்தபோது சுகன்யாவுடன் வெங்கடேசன் இருந்த வீடியோவை நந்தினி அனுப்பியிருந்தார்.

பிறகு , மீண்டும் வெங்கடேசனை செல்போனில் தொடர்பு கொண்ட நந்தினி ரூ 20 லட்சம் கொடுத்தால் விட்டு விடுகிறோம். இல்லையென்றால் இந்த காட்சியை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அனுப்புவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், பீதியடைந்த வெங்கடேசன் ரூ.14 லட்சம் முதல் கட்டமாக கொடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த நிரேஷ், நந்தினி, சுகன்யா உள்ளிட்டவர்கள் வெங்கடேசனை தொடர்பு கொண்டு ரூ. 80 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்காவிட்டால், ஆபாச காட்சிகளை தொலைக்காட்சியில் வெளியிடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் நொந்து போன வெங்கடேசன், பணம் பறிப்பு குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் நிரேஷ், நந்தினி, சுகன்யா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments