குல்பூஷண் வழக்கில் வாதாட நிபந்தனையற்ற அனுமதி வழங்க வேண்டும்; பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தல்

பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படையின முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவக்கு ஆதரவாக வாதாட, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து இந்தியாவுக்கு நிபந்தனையற்ற முறையில் அனுமதியளிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ஓமர் சயீத் போன்றவர்கள் மீது தீவிரவாதத்திற்கு நிதித்திரட்டியதாக கண்துடைப்பு வழக்கை பாகிஸ்தான் போட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா மிக்கொடிய குற்றங்களை செய்த தீவிரவாதிகளுக்கு சிறிய குற்றங்களில் வழக்குப் பதிவு செய்து பாகிஸ்தான் விசாரணை நடத்தி வருவதாக சாடியுள்ளது.
பத்திரிகையாளர் டேனியல் பெர்லை கழுத்தை அறுத்து கொலை செய்த தீவிரவாதியை விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழ்நிலையில் ,தீவிரவாதிகளுக்கு மிகக்குறைந்த அளவில் தான் பாகிஸ்தானில் தண்டனை விதிக்கப்படுவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
Comments