150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிப் மருந்துகளை விநியோகம் செய்ததாகப் பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் 12 நாட்களில் சுமார் 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில் 3 கோடி பேருக்கு ஊசி போடும் இலக்கை எட்டப்போவதாகவும் அவர் கூறினார்.
உலகப் பொருளாதார மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது இந்தியா கோவிட் 19 நோயால் பாதிக்கப்படக்கூடிய முதல் நாடாக இருக்கும் என்று பலரும் கணித்ததாக கூறிய பிரதமர் இந்தியா வெற்றிகரமாக கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாக கூறினார்.
கொரோனா கொடுங்காலங்களில் அனைத்து நாடுகளும் தங்கள் வான் வெளி பயணங்களை மூடிக்கொண்ட போதும் இந்தியா ஒருலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தாக தெரிவித்தார்.
சுமார் 150 நாடுகளுக்கு அவசியமான மருந்துகளையும் இந்தியா விநியோகம் செய்ததாக மோடி தெரிவிததுள்ளார்.
Comments