மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர், 231 நாட்களுக்கு பிறகு மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் மாதம் 12 - ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 28-ஆம் தேதி நிறுத்தப்படுவது வழக்கம்.
அதன்படி தற்போது வரையில் 12 மாவட்டங்களில் பாசனத்திற்காக 165 டி.எம்.சி.,நீர் வழங்கப் பட்டுள்ளது. மேட்டூர் அணையில் நீர் மட்டம் 105.96 அடியாகவும், நீர் இருப்பு 72.78 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 1,069கன அடி வீதமாக இருக்கிறது.
Comments