காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜ.க.வில் இணைந்தார்

0 2477

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நமச்சிவாயம் மற்றும் அவரது ஆதரவாளரும் முன்னாள் எம்எம்ஏவுமான தீப்பாய்ந்தானும் பாஜகவில் இணைந்தனர்.

அப்போது பேசிய நமச்சிவாயம், நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி சென்று விட்டதாக குற்றம்சாட்டினார். புதுச்சேரியை வளமானதாக மாற்றவும், பாஜக ஆட்சிக்கு வரவும் இரவு பகல் பாராமல் உழைக்கப்போவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments