தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை நடத்த மேலும் ஒரு வார அவகாசம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

0 1615

மிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை நடத்த மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் தரப்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா கடந்த 21ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.

அதில்,தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க மேலும் ஒரு வாரம் காலம் அவகாசம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமண் அமர்வில் இதுகுறித்து விசாரணை நடைபெற்ற போது, தமிழகத்தில் காலியாக இருக்கும் மருத்துவ இடங்களை நிரப்பும் விதமாக கலந்தாய்வை நடத்த இன்று முதல் ஒரு வாரம் அவகாசம் வழங்குவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments