குடியரசுத் தலைவர் உரையை தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் புறக்கணிக்க போவதாக அறிவிப்பு

0 1180

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க உள்ளதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரசின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டன என்றார்.

எதிர்க்கட்சிகளின் விவாதங்கள் இன்றி சட்டங்களை நிறைவேற்றியதை கண்டித்து குடியரசுத் தலைவர் உரை புறக்கணிக்க 16 கட்சிகள் தீர்மானித்து உள்ளதாக அவர் கூறினார். காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள்,தேசிய வாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா,திரிணாமுல், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், முஸ்லீம் லீக், மதிமுக உள்ளிட்ட 16 கட்சிகள் புறக்கணிக்குமென அவர் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments