5ஜி சேவை நேரடி செயல்விளக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது - ஏர்டெல்

இந்தியாவிலேயே முதன்முறையாக, 5ஜி சேவை தொடர்பான, ஏர்டெல்லின் செயல்விளக்கம், தொழில்நுட்ப கேந்திரமான ஐதராபாத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக, 5ஜி சேவை தொடர்பான, ஏர்டெல்லின் செயல்விளக்கம், தொழில்நுட்ப கேந்திரமான ஐதராபாத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக ரீதியாக ஒரு குறிப்பிட்ட வலையமைப்பில் 5ஜி சேவையை வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்ததாகவும், எதிர்பார்த்ததை விட, சிறப்பாகவே, லைவ் டெமோ அமைந்திருந்ததாகவும், ஏர்டெல் கூறியுள்ளது.
ஏற்கனவே உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மத்திய அலைக்கற்றைகளில், இணை ஜிஹாஹெட்ஸ் கற்றை நுட்பத்தில், 5ஜி செயல் விளக்கம் முன்னெடுக்கப்பட்டதாகவும், ஏர்டெல் தெரிவித்துள்ளது.
4ஜி மூலம் கிடைக்கும் வேகத்தைக் காட்டிலும், 10 மடங்கு அதிக வேகத்தில் இயங்கும் 5ஜி நுட்பத்தில், ஒரு திரைப்படத்தை, சில நொடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments