பட்ஜெட் கூட்டத் தொடருக்காக நாளை கூடுகிறது நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்த உள்ளார்.
இதனால் முதல் நாள் கூட்டம் கூட்டுக் கூட்டமாக மைய மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடைபெற உள்ளது. முதல் அமர்வு 29 ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வின் போது பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 29 ஆம் தேதி குடியரசு தலைவர் ஆற்றும் உரையில் அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்பு இடம் பெறுமென தகவல் வெளியாகி உள்ளது.
Comments