விமானத்திற்குள் நடிகர் பப்லு பிரித்திவிராஜ்க்கும்,மேற்கு வங்க பயணிக்கும் இடையே மோதல் : சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு

0 45903

கொல்கத்தாவில் இருந்து வந்த விமானத்தில் தமிழக நடிகரும், பயணியும் மோதிக்கொண்டனர். கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த ஏர் ஏசியா விமானத்தில்  சென்னையைச் சேர்ந்த நடிகர் பப்லு பிரூத்திவிராஜும், கொல்கத்தாவைச் சேர்ந்த அபய்குமார்சிங் என்பவரும் பயணித்தனர்.

சென்னைக்கு விமானம் வந்த சேர்ந்த நிலையில் இருவரும், அவரவர் பெட்டிகளை  எடுத்த போது தகராறு ஏற்பட்டது. விமானநிலையத்திற்குள் வந்த போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்குள்ள போலீசாரிடம் மாறிமாறி புகார் அளித்தனர். அவர்களை விசாரித்த விமான நிலைய போலீசார், சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments