கதவு இடுக்கில் கை விரல் சிக்கியதால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு : தவறான சிகிச்சையால் உயிரிழப்பா ? - பெற்றோர் குற்றச்சாட்டு

0 15507

கை விரல் காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமி, உயரிழந்த சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது.

சிங்காநல்லூர் கார்த்திகேயன் என்பவரின் மகள் ஹேமர்னாவின் கை விரல் கதவு இடுக்கில் சிக்கி காயம் ஏற்பட்டிருந்தது. இதற்காக அங்குள்ள முத்தூஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமி திடீரென உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹேமர்னாவின்பெற்றோர், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு நிகழ்ந்து விட்டதாக குற்றஞ்சாட்டினர்.

சிங்காநல்லூர் காவல்துறையினர், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமியின் தலையில் ஏற்பட்ட காயத்தை பெற்றோர் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்றும், சிறுமிக்கு வலிப்பு வந்ததால் சி.டி ஸ்கேன் எடுத்தபோது தலையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments