வேறொரு நபருடன் காதல்; காதலியை கத்தியால் குத்தி காதலன் வெறிச்செயல்..!

திருவள்ளூரில் காதலித்த பெண்ணையே கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்த காதலனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் பிரேமலதாவும், புத்தகரத்தைச் சேர்ந்த சுதாகரும் 6 வருடமாக காதலித்து வந்த நிலையில், பிரேமலதாவிற்கு வேறொரு நபருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுதாகருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சுதாகர், இன்று அதிகாலை பிரேமலதா வீட்டின் கழிவறை அருகே மறைந்து நின்று அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். குடல் சரிந்து உயிருக்கு போராடிய பிரேமலதாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
Comments