வன்னியர்களுக்கான திமுக சாதனைகளை மறைக்க இராமதாஸ் முயற்சி: மு.க.ஸ்டாலின்

0 1711
ஜெயலலிதா நினைவிடம் திறப்பதை பினாமிகள் மூலம் வழக்குப் போட்டுத் தடுத்ததாக, முதலமைச்சர் பொய் சொல்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா நினைவிடம் திறப்பதை பினாமிகள் மூலம் வழக்குப் போட்டுத் தடுத்ததாக, முதலமைச்சர் பொய் சொல்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், மாற்றுக்கட்சியினர் 1,100 பேர் திமுகவில் இணையும் விழாவில், காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்காலத்தில், வன்னியர் சமுதாயத்திற்காக, கலைஞர் செய்த சாதனைகளை மறைத்து, பாமக நிறுவனர் இராமதாஸ் பொய் பரப்புரையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக, தாம் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூற இயலாமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் மீது அவதூறு பரப்புவதாகவும், மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments