ரயில்களில் நடமாடும் உணவு வழங்கல் சேவையைத் தொடங்க 4 வாரங்களில் முடிவெடுக்க ரயில்வேக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்

0 734
ரயில்களில் நடமாடும் கேட்டரிங் சேவையை மீண்டும் அனுமதிப்பது குறித்து 4 வாரங்களில் முடிவெடுக்க ரயில்வேக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ரயில்களில் நடமாடும் கேட்டரிங் சேவையை மீண்டும் அனுமதிப்பது குறித்து 4 வாரங்களில் முடிவெடுக்க ரயில்வேக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், நடமாடும் உணவு வழங்கல் சேவையும் நிறுத்தப்பட்டது.

மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் கடந்த முறை உரிமம் பெற்றுள்ளவர்களை கேட்டரிங் சேவைக்கு அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு ரயில்களுக்கு மட்டும் தான் புதிய டெண்டர் எனவும், வழக்கமான ரயில்களில் உணவு வழங்கலை அனுமதிக்கும்போது மனுதாரரின்  கோரிக்கையைப் பரிசீலிப்பதாக ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments