சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்டு பரிகாரம், தாய்லாந்தில் விநோத பூஜை..!

தாய்லாந்து நாட்டில் சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்டு பரிகாரம் செய்யும் விநோத சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் இந்த சடங்கு நிகழ்ச்சியில், மக்கள் சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்டு தங்களை ஒரு துணியால் மூடிக்கொள்கின்றனர்.
அதன் பின்னர், துறவி ஒருவர் மந்திரம் ஓதும் விநோத சடங்கு நிகழ்ச்சி அங்கு பிரபலமாக நடைபெற்று வருகிறது. இந்த பூஜையால் தங்களின் கஷ்டங்கள் குறைந்து, வாழ்வாதாரம் மேம்படும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Comments