தவறான சிகிச்சையால் உயிரிழந்த தனது நாயின் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கோரி உரிமையாளர் மனு

0 516

தவறான சிகிச்சையால் உயிரிழந்த தனது நாயின் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கோரி, உரிமையாளர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, கால்நடைத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 வயது ஜெர்மன் ஷெப்பர்டு நாய், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட போது, கடம்பத்தூர் கால்நடை மருத்துவர் அளித்த மருந்து காரணமாக கோமாவுக்கு சென்று விட்டதாக மனுதாரர் கூறியுள்ளார்.

பின் நாயை பரிசோதித்த வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவர், தவறான மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்த நிலையில் கடந்த டிசம்பரில் நாய் இறந்து விட்டதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

நாயின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, பிரேத பரிசோதனை செய்யக் கோரிய மனு மீது தமிழக அரசு வரும் 1ம் தேதிக்குள் பதிலளிக்க, நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments